scorecardresearch

வெப் சீரிஸாக மாறும் எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதா மோதல்… ராதிகா கொடுத்த முக்கிய தகவல்

Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் காமெடி வில்லன், குணச்சித்திரம் என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிய எம்ஆர் ராதா நடிக வேல் என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

Tamil Cinema Actress Radhika Produce Her Father Life History Web Series : கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டத்தில் இருந்து திரைப்படங்களை விட வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் நடிகைகள் பலரும் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சரத்குமார் இரை உள்ளிட்ட சில வெப் தொடர்களில் நடித்துள்ள நிலையில், நடிகை ராதிகா நடிப்பில கார்மேகம் என்ற வெப் தொடர் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெப் தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல் நடிகை ராதிகா வெப் தொடரை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், தனது தந்தையும், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகருமான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக தயாரிக்க போவதாக ராதிகா கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் காமெடி வில்லன், குணச்சித்திரம் என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டிய எம்ஆர் ராதா நடிக வேல் என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

இதேபோல் நடிப்பு மற்றும் தமிழக அரசியலில் தனக்கென தனி பாதை வகுத்து மக்களின் மனதில் இன்றளவும குடிகொண்டுள்ளவர் எம்ஜிஆர். ஆனால் எம்.ஜி.ர். எம்.ஆர்.ராதா இருவருக்கும் இடையே தொழில் மற்றும் கொள்ளை ரீதியாக போட்டி தனிப்பட்ட மோதல்கள் இருந்து வந்தது.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். அதன்பிறகு எம்ஜிஆர் சரியாக பேச முடியாமல் திணறிய நிலையில், அவரை சுட்ட எம்ஆர் ராதாவுக்கு நிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர்களுக்குள் நடந்த இந்த மோதல் போக்கு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா இருவருக்கும் இடையேயான மோதலை வெப் தொடராக தயாரிக்க உள்ளதாகவும், இதில் எம்ஆர்.ராதா கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் நடிகை ராதிகா சமீபத்தில் தெலுங்கு மீடியா ஒன்றில் கூறியுள்ளார். இதனால் தற்போது இந்த தொடர் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress radhika produce her father life history web series