தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடி வரும் நடிகை ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருக்கு வித்தியாசமான பரிசளித்து அசத்தியுள்ளார்.
1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளாக இவர், தொடர்ந்து, ரஜினிகாந்த் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா நடிப்பில், 90-களின இறுதியில் வெளியான சித்தி சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ராதிகாவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என மாறி மாறி நடித்து வந்த ராதிகா தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 1985-ம் ஆண்டு நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்ட ராதிகா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பிறகு 1990-ம் ஆண்டு ரிச்சர்ட் ஹார்ட்லி என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், 1992-ம் ஆண்டு அவரையும் பிடித்தார். அதன்பின்னர் 9 வருடங்களுக்கு பிறகு கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ள நிலையில், சரத்குமார் ராதிகா தம்பதி இன்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டடி வருகின்றனர். இந்த நாளில் இருவரும் இணைந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள வித்தியாசமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த பயணத்தில் விதிதான் நம்மை இணைத்துள்ளது. இரண்டு செடி ஒரு பானையில் வேரை தேடி ஒன்றாக வளரும் என்ற சீன பழமொழியை பதிவிட்டு தனது கணவர் சரத்குமாருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“