Advertisment
Presenting Partner
Desktop GIF

பழம்பெரும் நடிகரின் மகள்: இப்போது அரசியல்வாதி: இந்த நடிகை யார்னு தெரியுமா?

பழம்பெரும் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார்னு தெரியுமா?

author-image
WebDesk
New Update
Actress readhia

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வரும் ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர் அல்லது நடிகைககளின் தகவல்களை தேடி தெரிந்துகொண்டு வருகின்றனர். இதில் ரசிகர்களை யோசிக்க வைக்கும் வகையில், அவ்வப்போது அவர்களின் அஸ்தான நாயகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது கேரக்டர் நடிகையாக முத்திரை பதித்து வரும் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமான இவர், பழம்பெரும் நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் என பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தற்போது அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் யார்னு கண்டுபிடித்துவிட்டீகளா? அவர் தான் நடிகை ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான இவர், பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானார். அடுத்து ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.

Radhika sarathkumar 2

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்த ராதிகா முன்னணி நடிகையாக உயர்ந்த நிலையில், தற்போது வெள்ளித்திரையில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.  இவரின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment