scorecardresearch

இலங்கையில் ராதிகா; க்யூட் போட்டோஸ்: ‘நயனுக்கே டஃப் கொடுப்பாங்க போல’

80-90 களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருபவர் ராதிகா

இலங்கையில் ராதிகா; க்யூட் போட்டோஸ்: ‘நயனுக்கே டஃப் கொடுப்பாங்க போல’

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா சரத்குமார், முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

80-90 களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருபவர் ராதிகா. பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகளான இவர், இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இருவரும் தங்களது குடும்பத்துடன் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் கணவருடன் சுற்றுலா சென்று நீச்சல் குளத்தில் இருந்தபடி நடிகை ராதிகா வெளியிட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. அந்த வகையில் உறவினர் திருமணத்திற்காக தற்போது குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உறவினர்கள் மற்றும் கணவர் சரத்குமாருடன் இணைந்து ராதிகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது தனியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைககள் பலரும் தங்களது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில், அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், என்றும் இளமைக்கு சிறந்தவர்களில் ராதிகாவும் ஒருவர் என்று கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress radhika sarathkumar fashion photos viral