தி.மு.க பிரச்சார வேனில் மயங்கி விழுந்தேன்: ராதிகா ஃப்ளாஷ்பேக்

நானும் கலைஞரும் பழகிய நாட்கள் ஒரு தந்தை மகளுக்குமான உறவாக இருந்தது. இதனை என்னால் மறக்கவே முடியாது.

நானும் கலைஞரும் பழகிய நாட்கள் ஒரு தந்தை மகளுக்குமான உறவாக இருந்தது. இதனை என்னால் மறக்கவே முடியாது.

author-image
WebDesk
New Update
Radhika sarathkumar

நடிகை ராதிகா சரத்குமார்

தேர்தல் களத்தில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும்போது பசி மயக்கத்தில் தான் பிரச்சார வேனில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் ராதிகா. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் தனக்கான ஆளுமையை உருவாக்கிய ராதிகா தற்போது தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.

இனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் 198- தேர்தலில் தான் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும்போது பசி மயங்கத்தில் பிரச்சார வேனில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நடைபெறும் இந்த வேளையில் அவர் குறித்து சுவாரஸ்யமான பல தகவ்லகளை பகிர்ந்துகொண்டார்.

நானும் கலைஞரும் பழகிய நாட்கள் ஒரு தந்தை மகளுக்குமான உறவாக இருந்தது. இதனை என்னால் மறக்கவே முடியாது. அவரைப்போல் என்மீது அன்பு காட்டிய இன்னொரு தலைவரை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் எதைப்பற்றி பேச வேண்டும் என்று சொன்னாலும் உடனடியாக வீட்டுக்கு வா என்று சொல்லிவிடுவார். நானும் உடனடியாக சென்று அந்த விஷயத்தை பற்றி பேசிவிடுவேன்.

Advertisment
Advertisements

1989- தேர்தலின் போது திமுகவுக்காக நான் பிரச்சார மேடைகளில் கலந்துகொண்டு பேசினேன். தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இப்போது இருப்பது போன்று அப்போது பிரச்சாரத்திற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. காலை 9 மணிக்கு பிரச்சார வேனில் ஏறினால் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை பிரச்சாரம் நடைபெறும். கிராம் கிராமமாக செல்லும்போது கூடி நிற்கும் மக்கள் பிரச்சார வேனை நிறுத்த சொல்லி பேச சொல்வார்கள்.

பயணக்களைப்பு என்று கூட பார்க்காமல் சிரித்த முகத்துடன் அவர்களுடன் பேசுவேன். மக்கள் மத்தியில் நான் பேசுவதை அதிகாலையில் பத்திரிக்கையில் வந்துவிடும். அதை பார்த்த கலைஞர் தொலைபேசியில் என்னை அழைத்து பாராட்டுவார். அதன்பிறகு இன்றைய பிரச்சாரத்தில் என்ன பேசப்போகிறாய் என்று கேட்டுவிட்டு அதற்கான குறிப்புகளையும் கொடுப்பார். ஒரு பெரும் தலைவர் நான் பேசியதை பாராட்டிவிட்டு அடுத்த நாள் பேசுவற்கான குறிப்பையும் கொடுத்து உற்சாகப்படுத்துவார்.

ஒருமுறை திண்டுக்கல்லில் திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது மேடையில் பேசிவிட்டு வேனில் ஏறினேன். அப்போது அதிகாலை 2 மணி. பசி மயக்கத்தில் வேனுக்குள் விழுந்தேன். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது என்னுடன் கலைஞர் மகள் செல்வியும் இருந்தார். இந்த செய்தி மேட்டூர் வைகை விருந்தினர் மாளிகையில் இருந்த தலைவர் கலைஞருக்கு தெரிந்து உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து விசாரித்தார்.

அப்போது அவர் உடனடியாக வருவதாக கூறினார். அரை மயக்கத்தில் இருந்த என்னிடம் பேசியபோது அதெல்லாம் சரியாவிட்டது. நீங்கள் வர வேண்டாம் அப்பா உங்கள் பிரச்சார்தை தொடருங்க்ள என்று சொன்னேன். அதன்பிறகு அவர் சமாதானமானார் என்று நடிகை ராதிகா தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Radhika Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: