தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அரசியல் தலைவர் என்று இருந்த விஜயகாந்த் ஆரம்பகால கட்டத்தில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியதற்கு காரணம் நான் தான் என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த், குறுகிய காலத்தில் அரசியலிலும் கால்பதித்து வெற்றி கண்டார். தற்போது உடல்நலகுறைபாடு காரணமாக சினிமா அரசியல் இரண்டிலும் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது விஜயகாந்த் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும் அவர் ஆக்டீவாக இருந்த காலகட்டத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயகாந்த் குறித்து மறக்க முடியாத அனுபவங்கள், சம்பவங்கள் என பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவரின் ஹேர்ஸ்டைல் மாற்றியதற்கு காரணம் நான் தான் என்று நடிகை ராதிகா கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராதிகாவிடம் முதலில் ரஜினி குறித்து கேட்ட கேள்விக்கு அவர் நடிகைகள் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஆனால் என்னிடம் நன்றாக பழகுவார். அவர் என் ரவுடி என்று கூறியுள்ளார். அதேபோல் கமல்ஹசனும் படப்பிடிப்பு ஒன்றில் ரொமான்ஸ் பாடல் சரியாக வரவில்லை என்று இயக்குனர் ஷூட்டிங்க்கை நிறுத்திவிட்டார்.
அன்றைய நாளில் கமல்ஹாசன் முதல்முறையாக என்னிடம் பேசினார். அதன்பிறகு அந்த பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டது. அதேபோல் ஆரம்பகாலகட்டத்தில் விஜயகாந்த் கரடுமுரடாக முடி வளர்த்து வைத்திருப்பார். அவரிடம் உங்கள் முகம் சரியாக இருக்கிறது. ஆனால் ஹேர்ஸ்டைல் சரியில்லை. உங்கள் முகத்திற்காக ஹேர்ஸ்டைலை மாற்றுங்கள் என்று சொன்னேன். அதன்பிறகு என்னுடைய டிசைனரைத்தான் வரவழைத்து அவருக்கு முடி வெட்டினோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil