தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ராதிகா சரத்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதிகா முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் அசத்திய ராதிகா தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கும் ராதிகா சில சமயங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சி மாதங்களுக்கு முன்பு இவர் கணவர் சரத்குமாருடன் இணைந்து சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் உறவினர் திருமணத்திற்காக நடிகை ராதிகா சரத்குமார் தற்போது குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகன் மற்றும் கணவருடன் ஜாலியாக எஞ்சாய் பண்ணும் புகைப்படங்களை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில்,: ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவில் அரிதாக நாம் அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறோம், அந்த தருணத்தை ரசிக்கிறோம், நன்றி என்று ராதிகா பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர், சந்தோஷம் என்பதில் உலகில் எந்த ஒரு காரணத்துக்காகவும் சமரசம் செய்தலாகாது! காரணம், தனக்கும், பிறருக்கும், உலகத்துக்கும் சந்தோஷத்துக்கு மட்டுமே படைக்கப்பட்ட அபூர்வப்பிறவி நம் மானுடப்பிறவி! என் அன்பான பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மகிழ்ச்சியான தருணத்திற்கு வாழ்த்துக்கள் சரத்குமார் சார் ராதிகா மேடம் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என்றே பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக் தளத்தில் வைரலாகி வருகிறது.
மிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil