வயது வெறும் நம்பர்தான்… நீச்சல் உடையில் ராதிகா சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tamil Cinema Update : வெள்ளித்திரை  சின்னத்திரை என இரண்டிலுமே தனது ஆளுமையை செலுத்திய நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

Actress Radhika Swimming Photos Viral : 80, 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திகழந்தவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் என்ற பாரதிராஜா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், விஜய்காந்த் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 90 களின் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான சித்த தொடர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரை  சின்னத்திரை என இரண்டிலுமே தனது ஆளுமையை செலுத்திய நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு தனது கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் அரசியலில் பிஸியாக இருந்தாலும், ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து வெளியில் செல்வதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்த தம்பதி கோவா சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நடிகை ராதிகா நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை  சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இந்த வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகினறனர். சின்னத்திரையில் இருந்து ராதிகா வலகிவிட்டாலும், சினிமாவில் அவருக்கான வாய்ப்பு குறையவில்லை என்றே கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress radhika sarathkumar with swimming dress

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com