scorecardresearch

சித்தி, திஸ் இஸ் டூ மச்..! ராதிகா சரத்குமார் ஸ்விம் ஷூட்டுக்கு கலவையான ரியாக்ஷன்ஸ்!

Tamil Cinema Update : பேரிளம் பெண்கள் சிலர் கொள்ளை அழகு,அதை நீங்கள் நிரூபித்து காட்டி உள்ளீர்கள் என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சித்தி, திஸ் இஸ் டூ மச்..! ராதிகா சரத்குமார் ஸ்விம் ஷூட்டுக்கு கலவையான ரியாக்ஷன்ஸ்!

Actress Radhika Swimming Photos Viral Fams Rection : இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கந்த 1978-ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. தொடர்ந்து 80 மற்றும் 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர், ரஜினி கமல், விஜயகாந்த், சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்ட முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொணடத்துள்ளார்.

தொடர்ந்து 90 களின் இறுதிக்கட்டத்தில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம்வந்தார் இவரது நடிப்பில் வெளியான சித்தி 2 சீரியல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரை மற்றும் சின்னதிரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ஒரு சின்னத்திரையில் இருந்து விலகிய அவர் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த பிஸியான நேரத்திலும் தனது கணவருடன் வெளியில் செல்வதை தொடர்ந்து வரும் நடிகை ராதிகா சமீபத்தில் கோவா சென்றிருந்த நிலையில், அங்கு இருந்தபடி நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில வைரலாக பரவியது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டடிருந்த இவர், இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று அவரது ட்விட்ட கணக்கு ரெக்கவர் செய்யப்பட்டதை தொடர்ந்து, நான் மீண்டும் வந்துவிட்டேன் என்று கூறி தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள வைராகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் என்று கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் மேடம் உங்களுக்கு வயது என்றும் 16 தான் ஊர்காவலன் ராதிகா மேம் என்று கூறியுள்ளார். பேரிளம் பெண்கள் சிலர் கொள்ளை அழகு,அதை நீங்கள் நிரூபித்து காட்டி உள்ளீர்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். ஒரு சில ரசிகர் இந்த வயதில் இது தேவையில்லாத புகைப்படம் என்று கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress radhika viral photos fans reaction update