பகலில் ஒரு மாதிரி... இரவில் வேறு மாதிரி... ரகுல் ப்ரீத் சிங் ஃடிப்ரண்ட் க்ளிக்ஸ்
தீரன் படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது
2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து கிரிட்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், யுவன் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
Advertisment
தமிழில் 2-வது படமாக அருண்விஜயுடன் இவர் நடித்த தடையற தாக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது பலருக்கு தெரியவில்லை.
அதன்பிறகு என்னமோ ஏதொ என்ற தமிழ் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் தீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.
இந்த படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், எஸ்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடனும், அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.
இதில் அயலான் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் அக்டோபர் 31 லேடிஸ் நைட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவலாக இருக்கும் ரகுல் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பனிமலையில் பகல் இரவு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/