வாலி எழுதிய ஹிட் பாடல்: நாகேஷூடன் நடனமாடிய வாலியின் மனைவி; எந்த பாடல் தெரியுமா?
வாலி பாடல் எழுத அவரது நெருங்கிய நண்பர் நாகேஷ் நடமாட அவருடன் இணைந்து வாலியின் மனைவியும் நடமாடியுள்ளார். அந்த பாடல் காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவின், வாலிப கவிஞராக பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, ரமணி திலகம் என்பரை 1965-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல். அதே சமயம் ரமணி திலகம் நடிகர் நாகேஷூடன் பாடல் ஒன்றில் நடமாடியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாள் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலருக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதியதால் அவரது வாழ்க்கை துணை கிடைத்தது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலி 1965-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் 2 பாடல்கள் எழுதியிருந்தார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு வாலி எழுதிய 2 பாடல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. இதில் குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த பாடலின் மூலம் வாலியின் ரசிகையாக மாறிய ஒரு பெண், தினமும் வாலிக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களின் ‘’குமரி பெண்ணின் உள்ளத்திலே’’ பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் உங்களுக்கு ரசிகையாக மாறிவிட்டேன் உங்களை சந்திக்க வேண்டும் எப்போது என்ற சொல்லுங்கள் என்று கடிதம் எழுத தொடங்கியுள்ளார்.
Advertisment
Advertisements
தினமும் இந்த கடிதம் வருவதை பார்த்த கவிஞர் வாலி ஒருநாள், நீங்கள் என்னை நாளை சந்திக்கலாம் என்று பதில் அனுப்பியுள்ளார். அதன்படி அந்த ரசிகையை மறுநாள் வாலி சந்திக்க, இந்த சந்திப்பு பல மாதங்களாக தொடந்துகொண்டே இருந்துள்ளது. அதன்பிறகு இருவருக்கும் இடையே நட்பு உருவாக உரு கட்டத்தில் நட்பு காதலாக மாறி கவிஞர் வாலி அந்த ரசிகையை திருமணம் செய்துகொண்டார். அவர் தான் வாலியின் மனைவி ரமணி திலகம்.
நாகேஷ் நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில், இடம் பெற்ற அவலுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை கவிஞர் வாலி, எழுத, எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இசையமைக்க, டி.எம்.எஸ். பாடியிருந்ததார். படத்தின் நாயகன் நாகேஷூடன் இணைந்து ரமணி திகலம் இந்த பாடலுக்கு நடமாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“