தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்கள் பலருடன இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ரம்பா, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்டரி கெடுத்துள்ளார்.
90-களின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992-ல் தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பல தெலுங்கு படங்களில் நடித்த ரம்பா 1993-ம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி, பேஸ்பூரி ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ள ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பதை திருமணம் செய்துகொண்டார். தற்போது டொரண்டோவில் செட்டில் ஆகிவிட்ட ரம்பா, தனது குழந்தைகளை பார்த்து இருந்து வரும் நிலையில், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே, சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எதிலும் தலைக்காட்டாமல் இருந்த ரம்பா தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். விஜய் டிவியில் புதிதாக தொடங்க உள்ள, ஜோடி ஆர்.யூ.ரெடி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் 3 நாடுவர்களில் ஒருவராக ரம்பா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் நடன இயக்குனருமான சாண்டி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருடன் ரம்பா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரம்பா சின்னத்திரையில் ரீ-என்ட்ரி ஆக உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“