5 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகை, அவருக்கே அம்மாவாக நடித்த படம்: தமிழ் சினிமா ஸ்டார் வில்லி யார் தெரியுமா?

5 வயது இளைய நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகை, அதே நடிகருக்கு அம்மா கேரக்ரில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு படமாக இருக்கிறது.

5 வயது இளைய நடிகருடன் ரொமான்ஸ் செய்த நடிகை, அதே நடிகருக்கு அம்மா கேரக்ரில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு படமாக இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Ramyakrishnan Nani

சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அத்தியாயங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல் நடிகர் நடிகைகளும் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து தங்களை சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகை ஒருவர் ஒரு நடிகருடன் ரொமான்ஸாக நடித்துவிட்டு அதே நடிகருக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா?

Advertisment

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற ரம்யா கிருஷ்ணன். 2004 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான 'நானி'-யில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். மகேஷ் பாபுவை விடவும் ரம்யா கிருஷ்ணன் 5 வயது மூத்தவர். அதேபோல் 20 ஆண்டுகள் கழித்து, 2024-ம் ஆண்டு வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ்பாபுவின் அம்மா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இது திரையுலகில் நடிகர்களின் தேர்வு எந்தளவிற்கு மாறும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Ramya Krishnan14

திரையில் உள்ள உறவுகளில் இந்த மாற்றம், துறையின் வளர்ந்து வரும் கதை அமைப்புகளையும், பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடிக்கும் நடிகர்களின் திறனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரம்யா கிருஷ்ணனின் தொழில் பாதை, வயது மற்றும் முந்தைய கேரக்டர்கள் ஒரு நடிகரின் திறனை வரையறுக்காத சினிமா உலகில் கேரக்டர்களின் சித்தரிப்பின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

4 தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், நாயகி, வில்லி, முக்கிய கேரக்டர் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ரஜினிகாந்துக்கே வில்லியாக நடித்து அசத்தியவர் தான் ரம்யா கிருஷ்ணன். அவர் அந்த படத்தில் ஏற்று நடித்த நீலாம்பரி கேரக்ர் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு கேரக்டராக அமைந்துள்ளது.

Advertisment
Advertisements

Mahesh Babu Ramyakrish

அதேபோல், தெலுங்கு சினிமாவில், 'அல்லரி மொகுடு', 'ஹலோ பிரதர்' மற்றும் 'நரசிம்ம நாயுடு' போன்ற படங்களில் அவர் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் அறிமுகம், சஞ்சய் தத்துக்கு ஜோடியாக 'கல்நாயக்' மற்றும் வினோத் கன்னாவுடன் 'பரம்ப்பரா' போன்ற படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்ட ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் தான் இந்திய சினிமா அறியப்படும் முன்னணி நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: