காதல் தோல்வி... மீள முடியாத துயரம்: உடலில் ஏற்பட்ட மாற்றம்; ரம்யா பாண்டியன் உருக்கம்!

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update

காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்ததால், எனது உடலில் மாற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து எனது அக்காதான் என்னை மீட்டு கொண்டுவந்தார் என்று நடிகை ரம்யா பாண்டியன் உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisment

தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர் என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இவர், அடுத்து சமுத்தரக்கனியுடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே ரம்யா பாண்டியனுக்கு நல்ல பாராட்டுக்களை பெற்று தந்தது.

சூர்யா தயாரிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நன்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் முகிலன் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

Advertisment
Advertisements

இதனிடையே சமீபத்திய பேட்டியில் தனது முன்னாள் காதலர் குறித்து பேசிய ரம்யா பாண்டியன், எனக்கு ரொம்பவே பேட் பிரேக்கிங் நடந்தது. அதில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதில் இருந்து மீள முடியாமல் உடைந்துபோய்விட்டேன். இதன் காரணமாக எனது உடலில் மாற்றம் ஏற்பட்டு மிகவும் ஒல்லியாக மாறிவிட்டேன். இதில் இருந்து என்னுடைய அக்கா தான் என்னை மீட்டு கொண்டு வந்தார் என்று ரம்யா பாண்டியன் உருக்கமாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamil cinema actress Ramya Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: