இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா போல் தனக்கு கணவர் வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிர்க்கி பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அடுத்து தெலுங்கு படங்களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழில், கார்த்தியுடன் சுல்தான் படத்தில் அறிமுகமான இவர், விஜயின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாடும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தி படங்களில் கமிட் ஆகி வரும் ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.
இதில் ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஆகிய இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் ரசிகர் பக்கத்தில், ராஷ்மிகா இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ். அவருக்கு வரும் கணவர் சிறப்பானவராக இருக்க வேண்டும். வி.டி மாதிரி (VD Very Darling) (விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்கள் வி.டி என்று அழைக்கின்றனர்) ராஷ்மிகாவை ராணி என்று அழைக்கிறோம். அதேபோல் அவரை பாதுகாப்பவரும் ராஜாவாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவை பகிர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, இது மிகவும் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விரைவில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் நடைபெறும் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“