Advertisment

வித்தியாசமான ட்ரஸ்... ஸ்மைல் மிஸ்ஸிங்... ராஷ்மிகாவின் ஸ்பெஷல் க்ளிக்ஸ்

பொங்கல் தினத்தில் வெளியாள வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வித்தியாசமான ட்ரஸ்... ஸ்மைல் மிஸ்ஸிங்... ராஷ்மிகாவின் ஸ்பெஷல் க்ளிக்ஸ்

2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்தார்.

Advertisment
publive-image

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

publive-image

தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்தியில் கால்பத்தித்துள்ள ராஷ்மிகா சமீபத்தில் வெளியான மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

தொடர்ந்து 2021-ம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் ராஷ்மிகாவுக்கு நல்ல ரீச் கொடுத்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியாள வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

publive-image

குடும்ப கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட வாரிசு படத்தில் ராஷ்மிகாவுக்கு காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் விஜய் தனக்கு பிடித்த நடிகர் அதனால் இந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருந்தார்.

publive-image

தற்போது இந்தியில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment