இந்திய சினிமாவில் நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்தார்.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து 2021-ம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தராஷ்மிகாவுக்கு காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் விஜய் தனக்கு பிடித்த நடிகர் அதனால் இந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருந்தார். தற்போது இந்தியில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil