அஜித், சூர்யா மீது இவ்ளோ ஆசையா? சீரியல் நடிகையின் ஃபேன் கேள் மொமென்ட்

Tamil Entertaiment Update : ராட்சசன் படத்தில் நடித்த ரவீணா தாஹா வலைதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Acress Raveena Taha Interview : ராட்சசன் படத்தில் நடித்திருக்கும் ரவீணா தாஹா சமீபத்தில் அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. இந்த படத்தில், அபிராமியின், தோழியாக நடித்தவர்  ரவீணா தாஹா. தற்போது இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும், ரவீணா, அவ்வப்போது தனது புகைப்பம், மற்றும் தான் செய்யும் செயல்களை வீடியோக்களாக பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு அதிக ஃபாலோவர்கள் குவிந்து வரும் நிலையில், இவரின் பதிவுக்கு ரசிகர்கள் அதிகளவில், லைக், கமெண்ட், ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமாக ரசிகர்கள் இவரின் பதிவுக்காக நாள்தோறும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரவீணாவிடம் தொகுப்பாளர், மேரி மீ, கிஸ் மீ என்று யாரிடம் சொல்வீர்கள் என்று கேட்ப்பட்டது. இந்த கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்துள்ள ரவீணா சூர்யாவை பார்த்து மேரி மீ என்று சொல்வேன், கிஸ் மீ என்று அஜித்திடம் கேட்பேன் என பதில் அளித்துள்ளார். இவரின் பதிலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவும் எதிர்ப்பும் சம்மாக வந்து கொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress raveena taha say about actor ajith

Next Story
மாமியாருடன் கூலாக போஸ் கொடுத்த ரோஜா: என்ன விசேஷம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express