scorecardresearch

விஜய் ஹீரோயினுக்கு இவ்ளோ பெரிய மகனா? பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்

கடந்த 2000-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்திரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரீமா சென்.

விஜய் ஹீரோயினுக்கு இவ்ளோ பெரிய மகனா? பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்

விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ரீமா சென் தனது மகனின் 10-வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்திரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரீமா சென். அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜயுடன் பகவதி, விக்ரமுடன் தூள், விஷாலுடன் செல்லமே, திமிரு, சிம்புடன் வல்லவன், அர்ஜூனுடன் கிரி கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு தமிழில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்திருந்த ரீமா சென் அதே ஆண்டு,  தொழிலதிபர் ஷிவ் கரண்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆகியுள்ள நிலையில், இன்று தனது மகனின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு ரீமா சென் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், சிறுவயதிலிருந்து எடுக்கப்பட்ட மகனின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள ரீமா சென், மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரீமாசென் மகனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress reema sen son 10th birthday special

Best of Express