/indian-express-tamil/media/media_files/2025/08/28/geimi-daughter-2025-08-28-22-24-10.jpg)
தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக திகழ்ந்த ஜெமினி கணேசனின் மகள் ரேகா இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், தனது 15 வயதில் ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் நடிகர் தனக்கே தெரியாமல் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக த்ரோபேக் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில், நடிகை ரேகா போல் ஒரு பயணத்தைக் கடந்து வந்தவர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில், இன்று பாலிவுட்டின் ஃபேஷன் ஐகானாகப் போற்றப்படும் அவர், ஒரு காலத்தில் தனது தோற்றத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். தென்னிந்திய படங்களில் குறைந்த சம்பளம் கிடைத்ததால் இந்தி சினிமாவுக்கு வந்த ரேகாவின் திரைப்பயணம், வெற்றியைப் போலவே சர்ச்சைகளையும் சந்தித்தது. அவற்றில் ஒன்று, அவரது 15 வயதில் 'அஞ்சனா சஃபர்' (Anjana Safar) படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம்.
யாசிர் உஸ்மானின் 'ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி' (Rekha: The Untold Story) என்ற புத்தகத்தில், இந்த சம்பவம் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'அஞ்சனா சஃபர்' படத்தின் படப்பிடிப்பின்போது, இயக்குனர் ராஜ நவாதே மற்றும் தயாரிப்பாளர் குல்ஜீத் பால் ஒரு காதல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டனர். இந்தியில் முன்னணி நடிகராக இருந்த பிஸ்வஜீத் சாட்டர்ஜி, அந்த காட்சியில் நடித்தார். ரேகாவுக்கு இந்த காட்சி பற்றி முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை.
திடீரென, பிஸ்வஜீத் ரேகாவை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். எதிர்பாராத அந்த நிகழ்வு, கேமராக்கள் தொடர்ந்து ஓட, இயக்குனரும் 'கட்' சொல்லாமல் ஐந்து நிமிடங்கள் நீண்டது.
படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் ரேகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது கண்கள் மூடி, கண்ணீர் வழிந்தது. பின்னர் இது குறித்து ரேகா பேசுகையில், "இது திடீரென நடந்தது, நான் இதற்குத் தயாராக இல்லை. நான் இதைச் செய்யவில்லை, என்னை இதற்கு கட்டாயப்படுத்தினார்கள். இந்த நிகழ்வு தன்னை மிகவும் துயரப்படுத்தியதாகவும், தான் சுரண்டப்பட்டதாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார். மறுபுறம், பிஸ்வஜீத் இது இயக்குனரின் உத்தரவின் பேரில் நடந்தது என்றும், படத்தின் தேவைக்காக அது அவசியம் என்றும் கூறினார்.
அதே சமயம், தயாரிப்பாளர் குல்ஜீத் பால், ரேகாவுக்கு இந்த காட்சி பற்றித் தெரியும் என்றும் அவர் ஒப்புதல் அளித்ததாகவும் கூறி குழப்பத்தை மேலும் அதிகரித்தார். இந்த சர்ச்சைக்குப் பிறகு, தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார் ரேகா. அதில், முத்தக் காட்சிகள் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரேகா சிரித்தபடி, "ஆம், ஆனால் கதாநாயகி லேக்கிங்ஸ் அணிந்திருந்தால் மட்டுமே" என்று பதிலளித்தார். அவரது இந்த பதில் நகைச்சுவையா அல்லது ஏமாற்றமா எனப் புரியாமல் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவங்கள் ரேகாவின் ஆரம்பகால வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களுக்குச் சான்றாக உள்ளன. இருப்பினும், இந்த கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து, அவர் இன்று இந்திய சினிமாவின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது பயணம், கலைத்துறையில் உள்ள சவால்களையும், தனிப்பட்ட வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.