மூத்த நடிகையான ரேகா தனது சகோதரியை பார்க்க அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட ஹோம் டூர் வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1986-ம் ஆண்டு தமிழில் வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. பாரதிராஜா இயக்கிய இந்த படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்தது.
அதன்பிறகு ரேகா, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டக்கரான், பாட்டுக்கு நான் அடிமை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் குணா அண்ணாமலை என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தற்போது படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வரும் ரேகா கடைசியாக தமிழில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ள ரேகா, கனா காணும் காலங்கள் பாரதி கண்ணம்மா என ஒரு சில சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேகா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில் பல வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள தனது சகோதரியின் ப்ரண்ட் வீட்டில் ஹோம் டூர் சென்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். முதலில் வீட்டில் வெளியில் இருந்து தொடங்கும் இந்த வீடியோவில், வீட்டில் சுற்றுப்புறம் மிகவும் அழகாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே செல்லும் ரேகா அனைத்து இடங்களை பற்றியும் சொல்லிவிட்டு பாத் ரூம் சென்றவுடன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கேயே படுத்துவிடலாம் போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். சகோதரியின் ப்ரண்ட் வீட்டுக்கு டின்னருக்காக வந்த ரேகா தொடர்ந்து அவர்களின் வீட்டு தோட்டப்பகுதிக்கு சென்று ஆப்பிள் மரத்தை காட்டியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“