/indian-express-tamil/media/media_files/2025/05/25/J0fwIfyJuLI2W3GVpAJo.jpg)
தாம்பத்தியம் என்பது கணவன் – மனைவிக்கு இடையே நடக்கும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வில் பெண்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது ஒரு ஆணின் கடமை என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே கருத்தை தனது சொந்த அனுபவத்துடன் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் கூறியுள்ளார்.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், விலங்கு வெப் தொடர் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நடிகை ரேஷ்பா பசுபுலேட்டி, தற்போது, சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சீதாரமன், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில, தற்போது தாம்பத்தியம் மற்றும் முதலிரவு குறித்து ரேஷ்மா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிர்ச்சி பிளஸ் ஆப் மற்றும் கானா இணையதளத்தில் ஒளிபரப்பாகும் "அந்தரங்கம் அன்லிமிடெட்" என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின், 2-ம் பாகத்தில், பங்கேற்றுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி, தாம்பத்திய உறவின் முக்கிய அம்சங்கள்ஈ தாம்பத்திய நிகழ்வின்போது, முன் விளையாட்டு மற்றும் பொறுமாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து அழுத்தமாக கூறியுள்ளார்.
தாம்பத்திய உறவில் பெண்களுக்கு ஆண்களின் பொறுமை மிகவும் முக்கியம். எடுத்தவுடன் காஞ்ச மாடு கம்பங்காட்டில், புகுந்தது போல நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது, ஒரு பெண் உடல் மற்றும் மனரீதியாக உறவுக்கு தயாராவதற்கு முன் விளையாட்டு மிகவும் அவசியம். "பெண்ணிடமிருந்து சமிக்ஞை வரும் வரை முன் விளையாட்டை தொடர வேண்டும். அதற்கு பிறகே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மெதுவாக அதே சமயம் பொறுமையாகவும் செயல்படுவது உறவில் அதிக திருப்தியை தரும்.
முதல் திருமணத்தில் பொறுமையின்மை காரணமாக சில சவால்களை சந்தித்தேன். அதனால், முதலிரவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த தகவலை கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும், முதல் முறை உறவு, முத்தத்தின் முக்கியத்துவம், காமசூத்ரா, மாதவிடாய் நிறுத்தம், ஆண்களின் நெருக்கமான சுகாதாரம் போன்ற பல்வேறு தலைப்புகள் பற்றியும் ரேஷ்மா பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.