நடிகைகள் குறித்து அவதூறு கருத்து: டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகினி புகார்!

மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து, நடிகை ராதிகா உள்ளி்ட்ட தமிழ் நடிகைகள், தங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து கூறியிருந்தனர்.

மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து, நடிகை ராதிகா உள்ளி்ட்ட தமிழ் நடிகைகள், தங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து கூறியிருந்தனர்.

author-image
WebDesk
New Update
Rohini Kantharaj

நடிகைகள் தவறாக பேசியதாக கூறி பிரபல டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடிகை ரோகினி சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

யூடியூப் சேனல்களில் அவ்வப்போ சினிமா மற்றும் திரைத்துறையில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் டாக்டர் காந்தராஜ், சினிமா நடிகைகள் குறித்தும் பேசிய வருகிறார். குறிப்பாக கேரளா திரைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து, நடிகை ராதிகா உள்ளி்ட்ட தமிழ் நடிகைகள், தங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து கூறியிருந்தனர்.

இது குறித்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் காந்தராஜ், நடிகைகள் குறித்து அவதூறான கருத்துக்களை கூறி வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக கடந்த செப்டம்பர் 7ந் தேதி அவர் அளித்த பேட்டியில் தமிழ் நடிகைகள் குறித்து சர்ச்சையாக சில கருத்துக்களை பேசியியுள்ளார். மேலும் இவர் அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என்பது போன்று பேசியதாக கடும் கண்டனங்கள் எழுந்தது.

இது குறித்து நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோகினியின் பெயரில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில், டாக்டர் காந்தராஜ். ஒட்டுமொத்த நடிகைகளையும் பாலியல் தொழிலாளிகள் என்பது போல் பேசுகிறார்.  சினிமா துறையை சேர்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

Advertisment
Advertisements

மறைந்த நடிகைகள் முதல் தற்போது உள்ள நடிகைகள் அவரை அனைவர் பற்றியும், எவ்வித ஆதாரமும் இல்லாமல், பேட்டியில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது போல், டாக்டர் காந்தராஜ் பேசியுள்ளது வேதனை அளிப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் இந்த பேட்டியை நீக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Rohini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: