Tamil Cinema Update : சினிமாவில் பொதுவாக குறிப்பிட்ட இரு நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதிக்கொள்வது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகயைில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வது தொடர்ந்து வருகிறது. அஜித் படத்தை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும், விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் வாடிக்கயைாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் இதற்கு முன்பே வெளியாகி ஹிட் அடித்துள்ளது. தற்போது வலிமை படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள பீஸ்ட்ட படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியாகி சில மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. மேலும் இயக்குநர் அட்லி, நடிகை சமந்தா பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹக்டே, சீரியல் நடிகர் சித்து ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகினறனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரபிக்குத்து பாடலுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் அரபிக்குத்து பாடல் பெரிய ஹிட் அடித்துள்ளது என்று கூறிக்கொண்டாலும், இதெல்லாம் பாட்ஸ் செய்யும் வேலை என்று விஜய் ஹேட்டர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பொதுவான பார்வையாளர்கள் இல்லாமல் பேக் ஐடி ஓபன் செய்து அதன்மூலம் பார்வையாளர்களை அதிகரிக்க செய்வதற்கு பெயர்தான் பாட்ஸ்.
இதன் காரணமாக அரபிக்குத்து பாடல் உண்மையிலேயே ஹிட் பாடலா அல்லது விஜய் ரசிகர்களே கட்டமைத்தா மாய பிம்பமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த கேள்விகள் அத்தனைக்கும் பதில் சொல்லும் விதமாக நடிகை ரோஜாவின் மகன் பேசிய வீடியோ அமைந்துள்ளது. சமீபத்தில் தனது பெற்றோர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ரோஜாவின் மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணி, தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும், தன்னிடம்10 மெயில் ஐடி உள்ளதாகவும், விஜய் படத்தின் டீசர், டிரெய்லர், மற்றும் பாடல்கள் வெளியாகும்போது குறைந்தது 10 ஆயிரம் முறையாகவது பார்த்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் ஹேட்டர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் விஜய் பாடல் இப்படித்தான் ஹிட் அடிக்கிறது. அரபிக்குத்து பாடல் 8 நாட்களில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது இப்படித்தான் என்று தூற்றி வருகின்றனர். மேலும் நடிகை ரோஜா மகனே 100 ஐடி வைத்திருக்கும்போது விஜய்யின் தீவிர ரசிகர்கள் எத்தனை ஐடி வைத்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பி வருகினறனர்.
இதனால் சமூக வலைதளங்கள் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், கேஜிஎஃப், டிரெய்லர், ரவுடி பேபி பாடல் என பல வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடக்கும்போது அது பற்றி யாரும் குறை சொல்வதோ பாட்ஸ் என்று விமர்சிப்பதோ இல்லை. ஆனால் விஜய் படம் என்றால் மட்டும் பாட்ஸ் என்று சொல்ல ஆயிரம்பேர் வருகிறார்கள். நீங்கள் மட்டும் இப்படி பேக் ஐடி தயார் செய்து பார்ப்பது இல்லையா உங்களிடம் அந்த திறமை இல்லையா என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil