/indian-express-tamil/media/media_files/MxjyjofZHQLsQzfoupLh.jpg)
திருச்செந்தூர் கோவிலில் நடிகை ரோஜா
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது கணவர் இயக்குனர் செல்வமணியுடன் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில்,
செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரோஜா, தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அவர், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்ட ரோஜா, தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். மேலும், 2014,2019 உள்ளிட்ட 2 ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா ஆந்திர சட்டபையில் அமைச்சராக இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இதனிடையே நடிகை ரோஜா தனது கணவர் செல்வமணியுடன், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். நேற்று நடைபெற்ற ஆனி வருஷாபிஷேக விழாவில் பங்கேற்ற ரோஜா செல்வமணி, சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது, பொதுமக்கள் அவரிருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மக்கள் செல்பி எடுப்பதை பார்த்த அருகில் இருந்த தூய்மை பணியாளர்கள் ரோஜாவுடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அவர்களை பார்த்த ரோஜா, அவர்கள் அருகில் வருவதை பார்த்தவுடன், அங்கேயே நில்லுங்க இங்க வராதீங்க என்பது போல் சைகைகாட்டிவிட்டு அப்படியே செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். அவரின் சைகையால் சற்று சோகமான துப்புரவு பணியாளர்கள், அவரின் அருகில் செல்லாமல் அப்படியே போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ரோஜாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.