/indian-express-tamil/media/media_files/2025/09/22/sai-pallavi-2025-09-22-22-09-44.jpg)
ஹோம்லி லுக் நடிகை என்று அழைக்கப்பட்ட சாய் பல்லவி தற்போது தனது தங்கையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்’டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய் பல்லவி. 2009-ம் ஆண்டு தெலுங்கில் இ.டிவியின் அன்லிமிட்டெட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளப்படம் சாய் பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் கேரக்டர் கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையாக மட்டுமல்லாமல் பிரேமம் படத்தில் ஒரு நடன இயக்குனராகவும் சாய் பல்லவி பணியாற்றி இருந்தார்.
நடனத்தில் அதீத ஈடுபாடு கொண்ட சாய் பல்லவி, நடன தளத்தை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்.நடனத்தில் அவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் கூட, ஒரு கைதேர்ந்த நடன கலைஞர் போல அசத்தக்கூடியவர் சாய் பல்லவி. ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீனில் அவரது அவரது நடனத்திறன் வித்தியமாக இருக்கும். தனது தாயை தனது நடன குருவாகக் கருதுவதாக முன்பு கூறியிருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் தோன்றினார்.
முன்னணி நடிகர்களுடன் இணைந்த பல வெற்றப்படங்களை கொடுத்துள்ள சாய் பல்லவி, தெலுங்கில் ஷியாம்சிங்க ராய், தண்டேல், ஃபடா, தமிழில் அமரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அதேபோல் தனது படங்களில் கிளாமர் காட்டாமல் நடிக்கும் நடிகை என்று பெயரேடுத்த சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தற்போது பாலிவுட்டில் ராமாயனம் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sai pallavi in swimsuit #saipallavi#SaiPallaviHot#saipallavihotface#saipallavibikinipic.twitter.com/HyUuyW9D6Y
— South Indian Actress (@ActressSouth) September 21, 2025
ஹோம்லி லுக்கில் அசத்திய சாய் பல்லவி தற்போது தனது தங்கையுடன் நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம சாய் பல்லவியா, நம்பவே முடியலையே என்று தங்கள் கருத்துக்களை கூறி வரும நிலையில், இணையத்தில் இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 2021-ம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் நடித்திருந்தவர் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.