Advertisment

ராமாயணத்தில் நடிப்பதால் அசைவ உணவுகளை தவிர்க்கிறேனா? சாய் பல்லவி விளக்கம்

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் நடிகர் யஷ் இந்த படத்தில் ராவணன் கேரக்டரில் நடிக்கிறார்.

author-image
WebDesk
New Update
Saai Pallavi

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் யஷ் நடிப்பில் தயாராகி வரும் ராமாயணம் படத்தில் நாயகி சீதை கேரக்டரில் நடித்து வரும் சாய் பல்லவி இந்த படத்திற்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் அதிகம் போற்றப்படும் புராணக்கதைகளில் ஒன்றாக இருக்கும் ராமாயண கதையை இதற்கு முன்பு, பல படங்கள் மற்றுமு் டிவி சீரியல்களில் சொல்லி இருந்தாலும், அதற்கான வரவேற்பு இன்னும் மக்கள் மத்தியில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனை தக்கவைக்கும் வகையில் தற்போது ராமாணம் படம் 2 பாகங்களாக இந்தியில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.

அதேபோல் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் நடிகர் யஷ் இந்த படத்தில் ராவணன் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் நமித் மல்ஹோத்ரா இந்த படம் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி அசைவ உணவுகளை தவிர்த்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வதந்திகள் / இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் / தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் அல்லது இல்லாமல் (கடவுளுக்குத் தெரியும்) பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Advertisment
Advertisement

அது தொடர்ந்து நடப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது. இதை நிறுத்தத் தெரியவில்லை; குறிப்பாக எனது படங்களின் ரிலீஸ்கள்/ அறிவிப்புகள்/ எனது தொழில் வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்கள் குறித்து அடுத்த முறை நான் எந்த ஒரு “புகழ்பெற்ற” பக்கம் அல்லது ஊடகம்/தனிநபர் செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதையை வெளியிடுவதை கண்டால், நீங்கள் என்னிடமிருந்து சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய காலம் வரும் என்று பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment