Tamil Cinema Actress Samantha News Update : விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் சீரியஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்கள் பெற்றிருந்தார். இந்த சீரியஸில் நடித்த இவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. தொடர்ந்து தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் விஜய்சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா – சைதன்யா இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இடையில் இருவரும் சுற்றுலா மற்றும் வெளியிடங்களில் சுற்றித்திரியும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தென்னிந்திய சினிமாவின் ரொமான்டிக் ஜோடியாக வலம் வநத இவர்களுக்கு இடையில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் சமந்தா தனது சமூக வலைதள பங்கங்களில் தனது பெயரில் இருந்த அக்கினேனி என்ற வார்த்தையை நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யபோகிறார்கள் என செய்தி பரவியது. ஆனால் இது குறித்து இருவருமே எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டாலும், பதில் சொல்லாமல் இருவரும் தவிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற லவ் ஸ்டோரி படத்தின் ப்ரமொஷன் நிகழ்ச்சியில் கூட பர்ஸ்னல் விஷயங்கள் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று நாக சைதன்யா கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி செய்ய வந்த சமந்தாவிடம், நிருபர் ஒருவர் விவாகரத்து பற்றி கேட்டுள்ளார். இதை கேட்டு கோபமான சமந்தா "கோவிலுக்கு வந்து இதை கேட்பீர்களா.. புத்தி இருக்கா?" என கோபத்துடன் திட்டியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Sam Reply 💥💥😂 #SamanthaAkkinenipic.twitter.com/n9N9vzLQha
— Akshitha (@Akshu_Reddy20) September 18, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.