Advertisment

காதலர் எடுத்த போட்டோ... கட்டிபிடித்து போஸ் கொடுத்த சமந்தா : வைரல் போட்டோஸ்

சமந்தா, தற்போது ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். 

author-image
WebDesk
New Update
Samantha

சமந்தா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை தமன்னாவின் வருங்கால கணவர் போட்டோ எடுக்க, சமந்தா தமன்னாவை கட்டிபிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

Advertisment

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு வெளியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தி பேமிலி மேன் 2 சீரிஸ் மூலம் இந்தியில் நடித்த சமந்தா, அந்த வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tamannah Saman

இதனிடையே சினிமாவில் தனது நெருங்கிய தோழியாக இருக்கும் தமன்னாவுடன், அமேசான் நிறுவனம் நடத்திய சிட்டாடல் வெப் தொடரின் தொடக்க விழாவில் சமந்தா பங்கேற்றிருந்தார். பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், தமன்னாவை கட்டிபிடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamannah Saman

மேலும் தமன்னாவின் வருங்கால கணவராக இருக்கும் விஜய் வர்மா இந்த போட்டோவை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தமன்னாவின் வருங்கால கணவர் போட்டோ எடுக்க, கட்டிபிடித்தபடி சமந்தா போஸ் கொடுத்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment