Advertisment

செல்லப் பிராணிகளை கொஞ்சி மகிழும் சமந்தா: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

தனது செல்லப்பிராணிகளுடன் சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha Dogs

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தனது ஹாஷ் மற்றும் சாஷா என இரு செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோ காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து நடிகை சமந்தா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில்கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கடந்த சில மாதங்களாக மையோசிடிஸ் என்றும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாஇதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் புதிய படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சமந்தாஅமெரிக்காவில் சில மாதம் சிகிச்சை பெற்ற நிலையில்தற்போது ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ஹாஷ் மற்றும் சாஷா என்ற இரு செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடுவது போல் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்திற்காக சமந்தா இந்த புதிய செல்லப்பிராணிகளை வாங்கியுள்ளார்.

தனது பிஸியான வேளைகளிலும் நேரம் கிடைக்கும்போது முடிந்தவரை செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதற்கும் ஒதுக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதில் ஹாஷ் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் ஒன்றாக இருக்கும்போது அவர்களிடத்தில் வந்தே சேர்ந்தது. தற்போது இருவரும் பிரிந்துவிட்டாலும் சமந்தா ஹாஷை பாதுகாத்து வருகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment