Advertisment

நடிகை சமந்தாவின் சர்ப்ரைஸ் விசிட்... பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த கல்லூரி மாணவர்கள் : வைரல் வீடியோ

சமீபத்தில் தான் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக அறிவித்த சமந்தா, தற்போது சென்னையில் பல்கலைகழகம் ஒன்றிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Samantha Visit

நடிகை சமந்தா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் தான் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக அறிவித்திருந்த நடிகை சமந்தா, தற்போது சர்ப்ரைஸ் விசிட்டாக, சென்னையின் சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அவரை பார்த்த மாணவர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர்.

Advertisment

தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையான சமந்தா, கடைசியாக கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து இந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வந்தார். தி பேமிலி மேன் 2 தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இயக்கி வரும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக சிகிக்சை எடுத்தக்கொண்டே, இந்த வெப் தொடரில் நடித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இதனால் சமந்தா அடுத்து திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் தான் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக அறிவித்த சமந்தா, தனது சிகிச்சை குறித்து விபரங்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

சமந்தாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது அவர் சர்ப்ரைஸ் விசிட்டாய சென்னை சத்தியபாமா பல்கலைகழகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.  அவர் வருதை பார்த்த மாணவர்கள், இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சிறிது நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

மேலும்  பாடகி சின்மயி உட்பட பலர் இந்த வீடியோவைப் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தினத்தில், சமந்தா அணிந்திருந்த அசாதாரண உடையில் சமந்தாவின் புகைப்படங்கள் விட அதிகமாக வைரலாகி, இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. சமந்தாவின் இந்த அதிர்ச்சியூட்டும் தோற்றம் அவரது ரசிகர்களை திரையில் திரும்பிப் பார்க்க வைக்கும், மேலும் இது நடிகைக்கு திரைத்துறையில் ஒரு முக்கிய வெற்றியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment