/indian-express-tamil/media/media_files/ld9J0TFq1UeOotzJYP1e.jpg)
நடிகை சமந்தா
நடிகர் நாகசைதன்யாவை விவகாரத்து செய்த சமந்தா 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து சமந்தா தற்போது பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிரிந்தனர். அதன்பிறகு சினிமாவில் பிஸியான நடித்து வந்த சமந்தா, இடையில் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தற்போது இந்தியில், சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வரும் நிலையில், சமந்தா 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து சமந்தா இதுவரை எதுவும் பேசாமல் இருந்த நிலையில், தற்போது முதல்முறையாக தனது 2-வது திருமணம் குறித்து பேசியுள்ளார். சமந்தாவின் இந்த உரையாடல் தொடர்பன தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி யோசிக்கவில்லையா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த சமந்தா, "புள்ளிவிவரங்களின்படி இது மோசமாக இருக்கும்" என்று கூறியுள்ளார். மேலும் சுவாரஸ்யமாக, முக்கிய விவாகரத்து புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளார். அதில், "2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1வது திருமணத்தில், விவாகரத்து விகிதம் 50% ஆக உள்ளது. அதேசமயம், 2வது மற்றும் 3வது திருமணத்தில் விவாகரத்து விகிதம் 67% மற்றும் 73% ஆகும். இது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நடிகை சமந்தா, அக்டோபர் 2022 இல், தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மயோசிடிஸ் எனப்படும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று வரும் நிலையில், திரைபடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார், சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.