Tamil Entertainment Update : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ருத் பிரபு, ஜிம்மில் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முழு உடலும் வழக்கமாக நடசத்திரம் எரிவது போல உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் பானா காத்தாடி படத்தில் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் தனது கால் பதித்த சமந்தா அங்கும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவர் ஊ சொல்றீயா மாமா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தற்போதுவரை இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சமந்தா தனது 2022-ம் ஆண்டை புதிய அத்தியாயத்துடன் தொடங்கியுள்ளார்.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, அடிக்கடி தான் உயற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருகிறர். அந்த வகையில் தற்போது சமந்தா ஜிம்மில் எவ்வித உபகரணங்களும் இல்லாமல், உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். இந்த பயிற்சியின் போது முட்டிகாலில் தரையில் அமர்ந்திருக்கும் சமந்தா எவ்வித உபகரணங்களும் இல்லாமல், தரையில் இருந்து எழும்பி தனது கால்களை நேராக வைத்து அமர்கிறார். இந்த பயிற்சிக்கு அவரது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஊக்கம் கொடுத்து வருகிறார். இந்தவீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சமந்தா அந்த பதிவில், “உங்கள் 2022-ம் ஆண்டை இந்த உபகரணமில்லாத ‘லெவல்-அப்’ சவாலுடன் கிக்ஸ்டார்ட் செய்து, எரிவதை உணருங்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அதைச் செய்வோம் என்று பயிற்சியாளர் ஜுனைத் ஷேக்கிடம் கூறுவது போல் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பல ஆயிரம் கருத்துகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “