/indian-express-tamil/media/media_files/2025/08/19/samyuktha-menon-2025-08-19-16-01-37.jpg)
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சம்யுத்தா மேனன், தனக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு வெளியான மலையாள படமான பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். தொடர்ந்து, தீவண்டி, லிலி ஆகிய படங்களில் நடித்த இவர், கிருஷ்ணா நடிப்பில் வெளியான களரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஜூலை காற்றில் என்ற படத்தில் நடித்த சம்யுக்தா மேனன், மலையாள படங்களில் அதிகம் நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் நடித்தார்.
தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சம்யுக்தா மேனன், தமிழில் எல்.சி.யூ படமான பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார், அது மட்டும் இல்லாமல், மோகன்லாலுடன் ராம், பாலகிருஷ்ணாவுடன் அகண்டா 2, இந்தியில் மகாராணி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்' படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சம்யுக்தா, சமூக வலைத்தளங்களிலும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சம்யுக்தா மேனன், தனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், "ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது, எனக்கும் அது இருக்கிறது. எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், சில சமயம் மனஅழுத்தம் அதிகமாகும்போது அதைச் சமாளிக்க மிகக் குறைந்த அளவு வைன் எடுத்துக்கொள்வேன்," என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 'உள்ளதை உள்ளபடி' பேசும் சம்யுக்தாவின் இந்த நேர்மை பலரையும் கவர்ந்துள்ளது. அவர் கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சம்யுக்தா அடுத்து, விஜய் சேதுபதி பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த வருடம் தொடர்ச்சியாகப் பல படங்களில் அவர் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.
பெரும்பாலும் நடிகைகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தங்களின் பழக்கம் வழக்கங்கள் குறித்து வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் ஒருசிலர் தங்கள் நினைத்ததை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். அந்த வகையில் தான் தற்போது சம்யுக்தா தனது பழக்கத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.