Advertisment

சிவப்பு பட்டு... சிகை அலங்காரம் : பாரம்பரிய உடையில் பிக்பாஸ் பிரபலம்

2022-ம் ஆண்டு வெளியான மகா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சனம் ஷெட்டி, 2020-ம் ஆண்டு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

author-image
WebDesk
New Update
Sanam Shetty

நடிகை சனம் ஷெட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தற்போது சிகப்பு நிற பட்டுப்புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. தொடர்ந்து, மாயை, விலாசம், கதம் கதம், கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். 2022-ம் ஆண்டு வெளியான மகா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சனம் ஷெட்டி, 2020-ம் ஆண்டு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த போட்டியில் 63 நாட்கள் தாக்குபிடித்து விளையாடிய சனம் ஷெட்டி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். சமுகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சனம் ஷெட்டி தற்போது, சில புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஒரு 'அழகான பெண்மணி' என்று ரசிகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று வருகிறார்.

தங்க அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட புதுப்பாணியான சிவப்பு பட்டுப் புடவையில் ஜொலிக்கும் சனம் ஷெட்டி, கவர்ச்சியான தோற்றம், சிகை அலங்காரம் மூலம் வியத்தகு மற்றும் பளபளப்பான மேக்கப் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். திரையில் கவர்ச்சிக்காக அறியப்பட்ட பல்துறை நடிகை, "ஒவ்வொரு நாளும் பலவகையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய பதிவுகள் கவனம் பெற்று வருகிறது. முன்னதாக சனம் ஷெட்டி, "மிஸ் சவுத் இந்தியா 2016" பட்டத்தை வென்று பலரின் பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்த்ககது. நடிப்பில் ஆர்வத்துடன் இருக்கும் நபரான சனம் ஷெட்டி, தனது திறமைக்காக மட்டுமல்லாமல், அவரது ஊக்கமளிக்கும் ஃபேஷன் தேர்வுகளுக்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரின் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் காமெண்ஸ்களே இதற்கு முக்கிய உதாரணம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sanam Shetty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment