பிக்பாஸ் நிகழச்சியின் 7-வது சீசனில் இருந்து நடிகர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அம்புலி, விலாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் சனம் ஷட்டி. பிக்பாஸ் தமிழ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கலந்துகொண்ட இவர், தற்போது, நடிகை தனது யூடியூப் சேனலில் பிக்பாஸ் தமிழ் 7-வது சீசன் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் போட்டியாளர்கள் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் தரப்பு நியாயத்தை கூட கேட்காத தொகுப்பாளர் கமல்ஹாசன், உடனடியாக பிரதீப்பை ரெட்கார்டு கொடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றினார். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி, இந்த முடிவு தனது ஏமாற்றத்தை அளிக்கிறது. தான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை, ஆனால் பிரதீப்பின் விவகாரங்களில் கமல்ஹாசன் முழுக்க முழுக்க ஒரு பக்கச்சார்பானவராக இருந்துள்ளார்.
மேலும் பிரதீப் வெளியேற்றப்ட்டது முற்றிலும் நியாயமற்றது. சிவப்பு அட்டை சரியான காரணங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் 'பெண் பாதுகாப்பு' அச்சுறுத்தல் என்ற தவறான குற்றச்சாட்டுக்கு அவர் தகுதியானவர் அல்ல! கமல் சார் பெரும்பான்மையுடன் (புல்லி கும்பல்) சாய்ந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். ஆனால் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை விசாரிக்க தவறிவிட்டார்!
பிரதீப் நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருக்கிறார். ஆனால் எப்படி காட்டினார்கள். இன்று பாதுகாப்பற்ற உணர்வுக்காக அவருடன் நெருக்கமாகப் பேசி, ஒப்பந்தங்கள் செய்து, கட்டிப்பிடித்து, அவரது காதல் அறிவுரைகளைப் பின்பற்றி, பாடி ஷேமிங், கொடுமைப்படுத்துதல், ராகிங் செய்தல், அவதூறாகப் பேசுதல், இரட்டை விளையாட்டு விளையாடுதல். முக்கியமாக கூல் சுரேஷ் சொன்ன பெரிய பொய் அம்பலப்படுத்தப்படவில்லை. அல்லது பிரதீப்புக்கு தன்னை நிரூபித்துக்கொள்ள சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை! ஆனால் இன்று அதிக இதயங்களை வென்றார். பிக்பாஸ் தமிழின் இந்த சீசனில் அவர் மிகவும் தனித்துவமான விளையாட்டுக்காக நினைவுகூரப்படுவார் என்று கூறியுள்ளார்.
மறுபுறம், பல பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் பிரதீப்பை ஆதரிக்கின்றனர். நடிகரும் பிக்பாஸ் தமிழ் புகழ் கவின் ஒரு படத்தைப் வெளியிட்டு, “உங்களை அறிந்தவர்கள் எப்போதும் உங்களை அறிவார்கள் பிரதீப் ஆண்டனி" என்றும், "கமல் சார் முற்றிலும் அநியாயம்" என முன்னாள் போட்டியாளர்கள் பவானி ரெட்டி மற்றும் அமீர் கருத்து தெரிவித்துள்ளனர்.
In a nutshell..
— Sanam Shetty (@ungalsanam) November 5, 2023
How exactly was #PradeepAnthony 'Unsafe' with all the cams & staff members around the house 24/7?
.
Waiting to hear your side of the story @TheDhaadiBoy
Wish you the best for all your future ventures.#falseallegation#UnFairEvictionOfPradeep
#isupportpradeep… pic.twitter.com/6rfmRKlGus
பிரதீப் ஆண்டனி ஒரு நன்கு அறியப்பட்ட நடிகர் மற்றும் இயக்குனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் மற்றும் பிக் பாஸ் முன்னாள் மாணவரான நடிகர் கவினுடன் நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்டார். பிரதீப் ஆண்டனி சமீபத்தில் 'தாதா' படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான அரவி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து பிரதீப் ஆண்டனி 2019 ஆம் ஆண்டு 'வாழ்' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்த காதல் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.