சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சங்கீதா தனக்கு ஒரே நேரத்தில் அஜித் – விஜய் இருவருடனும் நடிக்க கதை வந்தது. ஆனால் நான் விஜய் படத்தை தேர்வு செய்தேன். அஜித் படத்தை மிஸ் செய்ததற்காக அந்த படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.
1978-ம் ஆண்டு சினேகிக்கான் ஒரு பெண்ணு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து, பல மலையாள படங்களில் நடித்து வந்த அவர், 1989-ம் ஆண்டு என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன்பிறகு சாமுண்டி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்த இவர், கமல்ஹாசனின் மகாநதி, படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ராஜ்கிரன் நடிப்பில் வெளியாக எல்லாமே ராசாதான் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சங்கீதா, அடுத்து புள்ளக்குட்டிக்காரன், சீதனம், அம்மன் கோயில் வாசலியே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும், அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால், அது விக்ரமன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் தான்.
நம்பியார், நாகேஷ் என தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார். இவர் உண்மையில், நடிகை சங்கீதாவின் சித்தப்பா. அதேபோல் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரவணன், பின்னாளில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சிம்பு நடிப்பில் வெளியாக சிலம்பாட்டம் படத்தை இயக்கியவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/CjoE54Gu3vMWv9dNgiTu.jpg)
பூவே உனக்காக படத்தில், நிர்மலா மேரி என்ற கேரக்டரில் நடித்திருந்த சங்கீதா தனது துருதுரு நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியில், இவரும் விஜயும் ஒன்று சேர்வார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தாலும், இந்த க்ளைமேக்ஸ்தான் படத்திற்கு சரியாக இருக்கும் என்று சொன்னவரே அவரின் கணவர் தான் என்று சங்கீதா கூறியுள்ளார். அதேபோல் இந்த படத்தில் நடிக்கும்போது நான் விஜய் ஃபேன் ஆவேன் என்று தெரியாது. நான் இப்போது தீவிர விஜய் ஃபேன். அவரின் துப்பாக்கி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார் சங்கீதா.
அதேபோல் பூவே உனக்காக படத்தின் கதையை தன்னிடம் கூறி நடிக்க கேட்டபோது, அஜித் நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் வெளியாக காதல் கோட்டை படத்திற்கான கதையும் சொல்லப்பட்டது. ஆனால் நான் விஜய் படத்தை தேர்வு செய்து நடித்தேன். இரண்டு படங்களும் 1996-ம் ஆண்டு வெளியாகி இரு படங்களும் வெற்றி பெற்றது. தமிழில் அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அந்த படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருந்தேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.