scorecardresearch

யார் பலசாலி? அம்மா நடிகை- இளம் நடிகை செம போட்டி வீடியோ

Tamil Cinema Update : சின்னத்திரையில் இருந்து வெளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவரான விஜே ரம்யா மொழி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார்.

யார் பலசாலி? அம்மா நடிகை- இளம் நடிகை செம போட்டி வீடியோ

Actress Saranya And VJ Ramya Competition : தமிழ் சினிமாவில் அம்மா நடிகை என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன். தமிழில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நாயகன் என்ற மெகாஹிட் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, தொடர்ந்து பிரபு, நெப்போலியன், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் தொடங்கி விஜய் சேதுபதி முதல் பல நடிகளுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். தற்போது சரண்யா பொன்வண்ணன், கள்ளப்பார்ட, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சமீபத்தில் அவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சின்னத்திரையில் இருந்து வெளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவரான விஜே ரம்யா மொழி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து மங்காத்தா, ஒகே கண்மணி, மாஸ், வனமகன் ஆடை மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில், சங்கத்தலைவன் படம் வெளியானது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ரம்யா சரண்யா பொன்வண்ணனுடன் யார் வலுவானவர் என்பதை சோதிக்கும் வகையில் போட்டி போடும் வீடியோ பதிவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த வீடியோ பதிவு 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சபாஷ் சரியான போட்டி என்ற வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress saranya stregnth compatiton with vj ramya