Advertisment
Presenting Partner
Desktop GIF

பாக்கி சம்பளம் கேட்ட சரோஜா தேவி: தகாத வார்த்தைகளால் திட்டிய தயாரிப்பாளர்; என்ன படம் தெரியுமா?

பாக்கி சம்பளம் கேட்ட நடிகை சரோஜா தேவி மற்றும் அவரது அம்மாவை தயாரிப்பாளர் ஒருவர் கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Saroja Devi P Susee

தமிழ் க்ளாசிக் சினிமாவில், முன்னணி நடிகையாக இருந்த சரோஜா தேவி தான் நடித்த படத்தில் சம்பளம் தராத இயக்குனர் மற்றும் நடிகரிடம் சம்பளம் கேட்டு போனபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Advertisment

கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.

அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. இதனிடையே 1956-ம் ஆண்டு வெளியான கோகிலவாணி என்ற படத்தில், சரோஜா தேவி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எஸ்.ஏ.நடராஜன் இயக்கிய இந்த படத்தில், அவரே நாயகனாக நடித்திருந்த நிலையில், தாம்பரம் லலிதா என்பவர் நாயகியாக நடித்திருந்தார். பி.ராமநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  மருதகாசி, எஸ்.டி.சுந்தரம் ஆகியோர் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தனர்.

இந்த படத்திற்காக சரோஜா தேவிக்கு ரூ1000 சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அதற்காக முதலில் அட்வான்ஸ் ரூ101 கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெரிய நஷ்டமடைந்த தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் எஸ்.ஏ.நடராஜன், அவரது நண்பர் விஜயன் ஆகியோர் ஹோட்டல் அறையில் தங்கி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது தமிழ் பட வாய்ப்பு தேடி தனது அம்மாவுடன், சென்னை வந்த சரோஜாதேவி, எஸ்.ஏ.நடராஜன் இருப்பதை பார்த்து அவரிடம் தனது சம்பள பாக்கியை கேட்டுள்ளார். தோல்வியின் விரக்தியில் இருந்த எஸ்.ஏ நடராஜன், சரோஜா தேவி மற்றும் அவரது அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி, உங்களை வைத்து படம் எடுத்ததால் தான் நான் தோல்வியை சந்திதேன், இங்க எதுக்கு வந்தீங்க என்று கடுமையான சொற்களால் திட்டியுள்ளார்.

அவரின் இந்த நடத்தையை பார்த்த சரோஜா தேவி மற்றும் அவரது அம்மா இருவரும் நீ நல்லாவே இருக்க மாட்ட என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இந்த தகவலை, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகருமான கலைஞானம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

saroja devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment