தற்போதைய சினிமா வியாபரம், பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியில் இருந்தாலும், நட்பு, சக நடிகருக்கு உதவும் தன்மையில் கொஞ்சம் பின்தங்கியுள்ளது என்றே சொல்லலாம். இன்றைய காலக்கடத்தில் இரு நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படங்கள் வந்தால் அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் பலமுறை இரு நடிகைகள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
இரு நடிகைகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்தாலும் படத்திற்காக ஒன்றாக இணைந்த தருணங்கள் கூட இருக்கிறது. இதற்கு முக்கிய உதாரணம் சாவித்ரி சரோஜா தேவி ஆகியோரை சொல்லலாம். அந்த வகையில் தனது பெயர்தான் முன் வரவேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் சண்டைபோட்ட ஒருவரை பல பேட்டிகளில் புகழ்ந்து பேசிய மனம் படைத்தவர் தான் பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவருக்கு 15 வயதிலேயோ பால்ய விவாகம் நடந்துள்ளது. கணவருக்கு சரியான வேலை இல்லததால் பிழைப்புக்காக சென்னை வந்த இவருக்கு பல போராட்டங்களுக்கு பிறகு சவுக்கார் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு ரூ2500 சம்பளமாக கொடுத்துள்ளனர். வறுமையில் இருந்து மீளவே சினிமாவுக்கு வந்தததாக சவுக்கார் ஜானகி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சவுக்கார் ஜானகி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர்க்கு ஜோடி ஜெயலலிதா தான் என்றாலும் கூட சவுக்கார் ஜானகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். அதனால் படத்தில் எம்.ஜி.ஆர் சவுக்கார் ஜானி ஜெயலலிதா அப்படி பெயர் வர தயாரிப்பு நிறுவனம் யோசித்திருக்கிறார்கள்.
இதை தெரிந்துகொண்ட ஜெயலலிதாவும் அவரது அம்மாவுக்கு தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று எம்.ஜி.ஆர்ருக்கு நான் தான் ஜோடி எனது பெயர் தான் முன் வரவேண்டும் அதன்பிறகு தான் சவுக்கார் ஜானகி பெயர் வர வேண்டும் என்று வற்புறுத்தி அவரிடம் எழுதி வாங்கியுள்ளனர். இதை கேள்விப்பட்ட சவுக்கார் ஜானகி தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர் நடந்தை கூறியுள்ளார்.
மேலும் படத்தில் அவரது பெயர் மன் வந்தாலும் படம் வெளியானதும் அவரை விட உங்களுக்குதான் புகழ் அதிகம் வரும் என்று சொன்னார். அவர் சொன்னதை போலவே இறைவா உன் மாளிகையில் என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஜெயலலிதா தனது பெயரை பின்னால் போடும்படி கூறினாலும் பின்னாளில் இவர்களுக்கு இடையில் ஆழமான நட்பு உருவாகி இருந்தது. சவுக்கார் ஜானகி பல பேட்டிகளில் ஜெயலலிதா குறித்து பெருமையாக பேசிய தருணங்கள் கூட உள்ளது.
உலகமே வியக்கும் அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த ஜெயலலிதா இந்தியாவுக்கே பிரதமராக வரும் தருகி படைத்தவர் என்றும், பல மொழி பேசும் அவரின் தனித்தன்மை நாட்டுக்கு மட்டுமல்ல பெண் இனத்திற்பே பெருமை என்று சவுக்கார் ஜானகி பல இடங்களில் பேசியுள்ளார். மேலும் இவரும் ஜெயலலிதாவும் பலமுறை போயஸ்கார்டன் வீட்டில் சந்தித்து பேசியுள்ளனர். இவ்வளவு பெருந்தன்மை உடைய சவுக்கார் ஜானகி சக கலைஞர்களுக்காக பலமுறை விட்டுக்கொடுத்துள்ளார்.
மேலும் அவர் படப்பிடிப்புக்கு சென்றால் கூட தனது சொந்த செலவிலும், சொந்த காஸ்யூமிலும் தான் செல்வாராம். இன்று என்ன காட்சி என்று தெரிந்துகாண்டு அதற்கு ஏற்றார்போல் சேலை அணிந்து செல்வாராம். தனது சொந்த காரிலேயே செல்லும் சவுக்கார் ஜானகி பெட்ரோலுக்கு காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டாராம். சம்பள விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் சவுக்கார் ஜானகி பேசிய தொகையை விட குறைவாக கொடுத்தாலும் அடுத்த படத்தில் பார்த்தக்கொள்ளலாம் என்று வாங்கிக்கொள்வாராம்.
அதேபோல் ஒரு நிறுவத்தில் தான் நடித்த படம் தோல்வியடைந்தால் அடுத்து அந்த நிறுவனத்திற்காக நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை குறைத்து கொண்டு படத்தின் தோல்வி சுமையை நானும் கொஞ்சம் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவாராம். இத்தகைய நல்ல பண்புகளை இன்றைய நடிகர்களிடம் பார்க்க முடியுமா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.