scorecardresearch

மறுமணத்திற்கு தயாரான நடிகை… தனுஷ் செல்வராகவன் நேரடி மோதல் : டாப் 5 சினிமா

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62-வது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது

மறுமணத்திற்கு தயாரான நடிகை… தனுஷ் செல்வராகவன் நேரடி மோதல் : டாப் 5 சினிமா

மறுமணத்திற்கு தயாரானா நடிகை

காதல்கொண்டேன், கோவில், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்த சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் 2-வது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது சோனியா அகர்வாலும் திருமணத்திற்கு தாயராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய பேட்டியில் எவ்வளவு நாள் தான் தனியாக இருப்பது எனக்கு பிடித்த நபரை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று சோனியா கூறியுள்ளார்.

ஏ.கே 62 இயக்குனர் மாற்றமா?

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62-வது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், ஏ.கே.62 படத்தை விக்கேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தடையற தாக்க, தடம், சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு வாரிசுக்கு கடும் போட்டியான பதான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், குடியரவு தினத்தை முன்னிட்டு வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் வாரிசு துணிவு இரு படங்களும் கடும் போட்டியாக உள்ள நிலையில், வெளியான 3 நாட்களில் பதான் திரைப்படம், 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேருக்கு நேர் மோதும் தனுஷ் செல்வராகவன்

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாத்தி. தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதே நாளில் செல்வராகவன் நடிப்பில், மோகன் ஜி இயக்கியுள்ள பகாசூரன் படமும் வெளியாக உள்ளதால் அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

தளபதி 67 ப்ரமோ எப்போது?

வாரிசு படத்திற்கு விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ப்ரமோ விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி வந்தது. இதனிடையே வரும் பிப்ரவரி 3-ந் தேதி தளபதி 67 ப்ரமோ வெளியாகும் என்று சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress second marriage and dhanush selva clash

Best of Express