scorecardresearch

இந்த விஷயத்தில் பார்த்திபன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்: மாஜி கணவர் நினைவுகளை பேசும் சீதா

ரஜினியுடன் குரு சிஷ்யன், கமலுடன் பாலச்சந்தர் இயக்கத்தில் உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட முன்னணி நடிகள் படத்தில் நடித்துள்ளார் சீதா

Seetha
நடிகை சீதா

1985-ம் ஆண்டு பாண்டியராஜன் பாண்டியன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சீதா. தொடர்ந்து ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர்குரு, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை தங்கைக்கு ஒரு தாலாட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் குரு சிஷ்யன், கமலுடன் பாலச்சந்தர் இயக்கத்தில் உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட முன்னணி நடிகள் படத்தில் நடித்துள்ள சீதா 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இந்த படத்தில் நடித்த சீதாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்

இந்த படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகமான பார்த்திபனை காதலித்த சீதா கடந்த 1990-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், 2001-ம் ஆண்டு பார்த்திபன் சீதா இருவரும் விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து சீரியல் நடிகர் சதீஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட சீதா கடந்த 2016-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்..

இதனிடையே சமீபத்தில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சீதா தனது முன்னாள் கணவர் பார்த்திபன் குறித்து சில நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். 1985-ம் ஆண்டு திரைப்படங்களில் அறிமுகமான எனக்கு ரஜிகாந்துடன் இணைந்து குரு சிஷ்யன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கிளாமராக நடித்த பாடலை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் எனக்கு போன் செய்து இது மாதிரி எல்லாம் நடிக்காதே என்று திட்டினார்.

அதன்பிறகு அவருடைய இயக்கத்தில் கமல்ஹாசனுடன் உன்னால் முடியும் தம்பி படத்தில் நடித்தேன். 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதைபடம் எனக்கு பெரிய திருப்புமுணையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதலும் மலர்ந்தது. அவரை காதலித்தபோது ஒவ்வொரு நாளும் த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்பு இடையில் யாருக்கும் தெரியாமல் வெளியில் சென்று அவருக்கு போன் செய்து ஒரு நிமிடம் பேசிவிட்டு வருவேன். அதற்குள் இங்கு எல்லோரும் எங்கே போன என்று கேட்டுவிடுவார்கள்.

பார்த்திபனுடன் திருமணத்திற்கு பின் நான் நடிக்கை என்பதையே மறந்து ஒரு மனைவியாக மாறிவிட்டேன். இதைத்தான் நானும் விரும்பினேன். அவ்வப்போது சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருகிகிறேன். அங்கு செல்லும்போதுதான் நான் சினிமாவில் என்னுடன் இருந்தவர்களை பார்ப்பேன். ஆனால் குழந்தைகளுக்கு எக்ஸாம் இருந்தா ஃபங்ஷன்களுக்கு போக முடியாது.

அதேபோல் பார்த்திபன் ரொம்ப ஸ்ரிக்ட். வெளியிலே விடமாட்டார். குழந்தைக்கு எக்ஸாம் இருக்கு அதை பாரு என்று சொல்லிவிடுவார். அதன்பிறகு அழுது அடம் பிடித்து செல்வேன். அழுதபிறகுதான் விடுவார். ஆனால் அவருடன் இருந்த ஒவ்வொரு நானும் நான் மகிழ்ச்சியாகதான் இருந்தேன் என்று நடிகை சீதா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress seetha says her ex husband r parthiban

Best of Express