சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஷகீலா. திரைத்துறையில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஷகீலா, கவுண்டமணி உள்ளிட்ட சில நடிகர்களுடன் காமெடி வேடத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் கவர்ச்சியில் இருந்து மாறிய ஷகீலா, தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெற்ற குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற பெயர் மாறி ரசிகர்கள் மனதில் குக் வித் கோமாளி ஷகீலாவாக இடம்பிடித்தார். மேலும் இந்நிகழ்ச்சி தன் இமேஜை மாற்றுள்ளதாக அவரே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிவ், சமீபத்தில் தனது திரை வாழ்க்கை குறித்து பேசிய ஷகீலா, தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், மற்றும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன். என்னை போல் மாணவிகள் யாரும் ஏமாந்து விடாதீர்கள். நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் தற்போது படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார்.
மேலும் நான் கருத்துள்ள படம் தான் நடித்தேன். ஆனால், அந்த படங்களில் மற்ற நடிகைகள் ஆபாசமாக நடித்தால் நான் என்ன செய்வது? குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் என்னை பலரும் அம்மாவாக பார்க்கின்றனர். சமீபத்தில் கூட எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் குளிக்கும் சீன் இருக்கும் என்று சொன்னதால் அந்த படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்று என்று கூறியுள்ளார். ஷகீலாவின் வாழ்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil