scorecardresearch

நியாயம் கிடைக்காமல் போகமாட்டேன்.. அப்பார்ட்மெண்ட் மக்களுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா!

மாதாந்திர பராமரிப்பு கட்டணம் செலுத்தும்போது சர்வாதிகாரமாக செயல்படுகின்றனர். வசூலிக்கும் பணத்திற்கு முறையாக வரவு செலவு கணக்கு கொடுப்பதில்லை

Shakila
நடிகை ஷகீலா போராட்டம்

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் 40 வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி நடிகை ஷகீலா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் ஷகீலா. தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஷகீலா தற்போது அடுக்குமாடி குடியிறுப்பில் வசிக்கும் பேச்சலர்ஸ்காக குரல் கொடுத்துள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பு ஒன்றில் 40 வீடுகளுக்கு கடந்த 3 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டில் வசிப்பவர்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்பதால் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் குடியிறுப்பு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நடிகை ஷகீலா களமிறங்கியுள்ளார். மாதம் 2500 ரூபாய் பராமறிப்பு கட்டணம் செலுத்தி வந்த நிலையில், சில வீடுகளில் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் செலுத்தும்போது சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும், வசூலிக்கும் பணத்திற்கு முறையாக வரவு செலவு கணக்கு கொடுப்பதில்லை என்றும் அக்குடியிறுப்பில் வசிப்பவர்கள் சராமாறியாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அப்பார்மெண்ட் அசோசேசனில் இருப்பவர்கள் பொதுவாக அனைவருக்கும் 2500 கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அவர்களுக்கு பிடிக்காத சிலர் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக 9000 பராமரிப்பு கட்டணமாக கேட்கிறார்கள். நீங்கள் பேச்சிலர் அதுவும் இல்லாமல் பெண்களாக இருக்கிறீர்கள் இதனால் அதிக கட்டணம் என்று சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்,அப்பார்ட்மெண்டில் வாடகையே 16 ஆயிரம்தான் ஆனால் இவர்கள் பராமரிப்பு கட்டணம் என்று கூறி 9 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். பராமரிப்பு கட்டணம் குறித்து வரவு செலவு கணக்கு கேட்டால் எங்களை கார்னர் செய்து இங்கிருந்து விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதனிடையே இந்த மக்களுக்கு ஆதரவாக நடிகை ஷகீலா போராட்டக்களத்தில் இறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress shakila protest against apartment association