தனி படகில் மனைவியுடன் அஜித் : ஷாலினி வெளியிட்ட மாஸ் லுக் போட்டோ

துணிவு படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் அஜித் தற்போது தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

Ajith-and-Shalini
அஜித்குமார் – ஷாலினி

துணிவு கொடுத்து வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் அஜித் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அங்கு தனது மனைவி ஷாலினியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீசில் வசூலை ஈட்ட தவறியதில்லை என்ற பெயர் தொடர்ந்து வருகிறது. இதற்கு இவரது ரசிகர்களும் முக்கிய காரணம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான துணிவு படம் அஜித்துக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்தது.

அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட துணிவு படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், திடீரென படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு தற்போது மகிழ் திருமேனி இணைந்துள்ளார்.

படத்தின் திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் தற்போது தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஷாலினி அஜித்துடன் ஒரு படகு போல் உள்ளது. ஆனால் ஷாலினி படத்தின் இடத்தை குறிப்பிடவில்லை என்றாலும், அஜித்தின் குடும்பத்தினர் தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அவர்கள் ஐரோப்பாவில் சிறிது சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது ஷாலினி போர்ச்சுகலில் இருந்து அஜித்தின் படத்தைப் வெளியிட்டிருந்தார். அஜித் மற்றும் ஷாலினியுடன் அவர்களது குழந்தைகளான அனுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரும் இணைந்துள்ளனர். இதனிடையே அஜித் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவார் என்றும், அடுத்து மகிழ் திருமேனி இயக்கவுள்ள தனது அடுத்த ஏ.கே.62 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி நடிப்பில் இயக்கிய கலகத்தலைவன் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீசில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் அஜித் தனது அடுத்தப்பட வாய்ப்பை அவருக்கு அளித்தது ஒரு ஆச்சரியமான நடவடிக்கை.

ஏ.கே.62 முடித்த பிறகு, அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கு ரைட் ஃபார் மியூச்சுவல் ரெஸ்பெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress shalini shares vacation pictures with ajith kumar

Exit mobile version