scorecardresearch

ஷாலு ஷம்மு ஐபோனை அபேஸ் செய்த 8 வருட நண்பர்: பார்சலில் திருப்பிக் கொடுத்த ருசிகரம்

கடந்த 9-ந் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷாலு ஷம்மு, அன்று இரவு தனது நண்பர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

Shalu shamu
நடிகை ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பல ரீல்களை ரசிகர்கள் ரீக்ரியேட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 9-ந் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷாலு ஷம்மு, அன்று இரவு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். விடிந்து எழுந்து பார்த்தபோது அவரின் 2 லட்சம் மதிப்புள்ள ஐபோன் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலு இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் காணாமல்போன தனது ஐபோன் தொடர்பான தனது நண்பர்களை சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே தற்போது ஷாலு ஷம்மு வீட்டிற்கு டான்சோவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. இதனை பிரித்து பார்த்தபோது அதில் காணாமல்போன் ஐபோன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு தனது நண்பர்களில் யாரோதான் தனது ஐபோனை திருடியிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், நான் சந்தேகப்பட்ட நபர் தான் எனது ஐபோனை திருடியுள்ளார். 8 வருட நட்பு வீணாகியுள்ளது. என்று ஷாலு ஷம்மு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் காணாமல்போன ஐபோன் பார்சலில் வந்தது அவரது நண்பர்கள் மீது சந்தேகப்பட்ட விவகாரம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress shalu shamu missing iphone dunzo parcel found