Advertisment

உடலை ஒட்டிய பிளாக் டிரஸ்: பாம்பு போல வளைந்து ஆடிய பிக் பாஸ் ஷிவானி வீடியோ

வீட்ல விஷேஷம், டி.எஸ்.பி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி சமீபத்தில் வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
உடலை ஒட்டிய பிளாக் டிரஸ்: பாம்பு போல வளைந்து ஆடிய பிக் பாஸ் ஷிவானி வீடியோ

டிக்டாக் பிரபலமாக இருந்து சின்னத்திரை நாயகியாக உயர்ந்த நடிகை ஷிவானி நாராயணன் தற்போது சினிமாவில் வாய்ப்பு பெற்று வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளமான டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர், விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சீரியல் மட்டுமல்லாமல், ஜோடி நம்பர் ஒன், உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம், பிபி ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, வீட்ல விஷேஷம், டி.எஸ்.பி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி சமீபத்தில் வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த வருடம் இதே தினத்தில் அவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோவை தற்போது ரசிகர்கள் வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களை மத்தியில் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Shivani Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment