Advertisment
Presenting Partner
Desktop GIF

காதில் பூ... உதட்டில் சிரிப்பு: ஷிவானி நாராயணன் டிஃப்ரண்ட் க்ளிக்ஸ்

பிக்பாஸ் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Shivah

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நடிகை ஷிவானி நாயராணன், தற்போது காதல் பூவுடன் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், உள்ளிட்ட சில தொடங்களில் நடித்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பிறகு பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி, விக்ரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரின் மனைவியாக நடித்திருந்தார். அழகு மட்டுமில்லை ஆக்டிங் அண்ட் டான்ஸ் ஆடும் திறமையும் உள்ள  ஷிவானி டிக் டாக், டப்மேஷ்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். அதேபோல் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோயர்கள் உள்னர்.

விக்ரம் படத்தை தொடர்ந்து வீட்ல விஷேஷம், படத்தில் நடித்த ஷிவானி விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி, வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான பமம்பர் என்ற படத்தில் நடித்திருந்த ஷிவானி அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காத நிலையில், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது காதல் பூ மற்றும் உதட்டில் சிரிப்புடன் நாக்கை வெளியில் நீட்டி போஸ் கொடுத்துள்ள ஷிவானியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையி்ல, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த புகைப்படங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Shivani Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment