scorecardresearch

முத்த காட்சியா நோ… அழுது அடம் பிடித்த நடிகை ஷோபனா… கிளாசிக் ப்ளாஷ்பேக்

1993-ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழ் படத்தில் கங்கா நாகவல்லி என்ற இரு கேரக்டரில் நடிப்பில் மிரட்டிய ஷோபனா பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

Actress Shobana
நடிகை ஷோபனா

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாளில் முன்னணி நடிகையாக இருந்த ஷோபனா தனது முதல் படத்தில் முத்த காட்சிக்கு பயந்து அழுததாக பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா கூறியுள்ளார்.

1982-ம் ஆண்டு தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. பரதநாட்டிய டான்சரான இவர்,  1984-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 18 என்ற படத்தின் மூலம் நாய்கியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர் மலையாளத்தில் நடித்த மணிச்சித்திரதாழ் என்ற படம் பெரிய வரவேற்பை பெற்றது. 1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கங்கா நாகவல்லி என்ற இரு கேரக்டரில் நடிப்பில் மிரட்டிய ஷோபனா பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இந்த படம் பின்னாளில் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஷோபனா மலையாளத்தில் நடித்த இந்த கேரக்டரில் தமிழில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஷோபனா ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தில் நடித்திருப்பார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் அனிமேஷனில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பழம் பெரும் நடன இயக்குனராக புலியூர் சரோஜா தனது திரைத்துரை அனுபவங்களை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதில் நடிகை ஷோபனா பற்றி பேசிய அவர், ஷோபனா நல்ல டான்சர் ஆனால் அவரின் முதல் படத்தில் முதல் ஷாட் எடுக்கும்போது முத்தகட்சி என்பதால், அவர் அழுதுவிட்டார். அதன்பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

அதன்பிறகு பப்பி வந்து ஏன் இந்த மாதிரி பண்ற சரோஜா சொல்வதை கேள். முத்தம் அப்படி இல்லை. சினிமாவுக்காத்தான் அப்படி செய்கிறோம். அவர் சொல்வதை மாதிரி செய். உனக்கு சரியாக சொல்லி கொடுப்பாங்க என்று சொன்னார். அதன்பிறகு ஒரு வழியாக அழுது முடித்த ஷோபனா ஷாட்டுக்கு ஓகே சொன்னார். அதன்பிறகு அந்த ஷாட் எடுத்தோம். அடுத்த வந்த படங்களில் எல்லாம் ஷோபனாவுக்கு சகஜமாக போய் விட்டது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress shobana not agree for kiss scene in her first movie