2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரன். தொடர்ந்து சந்தோஷம், சின்னிகேசவ ரெட்டி, நுவ்வே நுவ்வெ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார். அதன்பிறகு 2003-ம் துஜிகே மேரி கசம் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ஸ்ரேயா, எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் மழை படத்தில் நாயகியாக நடித்த ஸ்ரேயா, அடுத்து ரஜினியுடன் சிவாஜி, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜயுடன் அழகிய தமிழ் மகன், கந்தசாமி, உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் 2017-ம் ஆண்டு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா தொடர்ந்து தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்

ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர், மற்றும் சமீபத்தில் வெளியான அஜய்தேவ்கனின் த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள கப்ஜா படத்தில் நடித்துள்ளார். உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், உங்களுக்கு வயதே ஆகாதா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“